"இங்கு நாம் ஆன்மா, உணர்வு இவற்றின் வேறுபட்ட நிலையை பார்க்கிறோம். அது வாழ்க்கையின் வேறுபட்ட நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் அந்த வாழ்க்கையின் வேறுபட்ட நிலை பல்வேறுபட்டது, 8,400,000 உருவாகிறது. வளர்கிறது என்றால் வேறுபட்ட உடல் அமைப்பு கொண்டுள்ளது. எவ்வாறு என்றால் இந்த குழந்தையைப் போல். இப்போழுது இந்த குழந்தைக்கு ஒரு உறுதியான உடல் இருக்கிறது. அதன் உணர்வு அந்த உடலுக்கு ஏற்றார் போல் இருக்கும். இந்த குழந்தை இளம் பெண்ணாக வளர்ந்ததும், அவள் உணர்வு வேறுபடும், - அதே பெண். எனவே ஆன்மீக ஆன்மா இந்த உடலால் அடைக்கப்படுகிறது, மேலும் உடலுக்கு ஏற்றார் போல், உணர்வும் வேறுபடும். புரிந்துக் கொள்ள மிகவும் எளிமையாக இருக்கிறது. இந்த குழந்தையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதே குழந்தை, அதே ஆன்மீக ஆன்மா, அது இப்போது வேறுபட்ட உடல் அமைப்பில் குடிகொண்டுள்ளது, அதன் உணர்வு தாயை போல் இல்லாமல் வேறுபட்டுள்ளது, ஏனென்றால் தாய்க்கு வேறுபட்ட உடல் அமைப்பு உள்ளது மேலும் குழந்தைக்கும் வேறுபட்ட உடல் அமைப்பு உள்ளது."
|