"கிருஷ்ணர் இந்த பிரபஞ்சத்திற்கு வந்தபோது, அவருடைய கோலோக வ்ருந்தாவனமும் அவருடன் வந்தது. எவ்வாறு என்றால் ஒரு அரசன் எங்காவது செல்லும் போது, அவருடைய அனைத்து உழியர்களும், அவருடைய செயலாளர், அவருடைய இராணுவ தளபதி, அவருடைய இது, அது - எல்லோரும் அவருடன் செல்வார்கள். அதேபோல், கிருஷ்ணர் இந்த கிரகத்திற்கு வரும்போது, அவருடைய அனைத்து சாதனங்கள், பரிவாரங்கள், எல்லோரும் நம்மை கவர காட்சி அளித்து, அதாவது "நீங்கள் இதை விரும்புகிறீர்கள். நேசிக்க விரும்புகிறீர்கள்." இங்கு நீங்கள் வ்ருந்தாவனத்தில் பாருங்கள் அனைத்திலும் அன்பு நிறைந்திருக்கும். வேறொன்றும் இல்லை. கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்று அவர்களுக்கு தெரியாது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள அக்கறை கொள்ளவில்லை. ஆனால் கிருஷ்ணரிடம் அவர்கள் கொணட இயற்கையான பாசம் மிகவும் தீவிரமானது, அதாவது கிருஷ்ணரை பற்றி இருபத்து நான்கு மணி நேரமும் நினைப்பதை தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்க முடியவில்லை. இதுதான் கிருஷ்ண உணர்வு."
|