TA/681108c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
" :"த்ருʼணாத் அபி ஸுநீசேன
:தரோர் அபி ஸஹிஷ்ணுனா :(சி.சி. அதி 17.31) யார் மஹாமந்திரம் உச்சாடனம் செய்ய பொருத்தமானவர்? அவர் வரையறை கொடுக்கிறார். அது என்ன? த்ருʼணாத் அபி ஸுநீசேன: புல்லைவிட அடக்கமானவர். உங்களுக்கு புல் என்னவென்று தெரியும், எல்லோரும் அதை மிதித்து செல்கிறார்கள், ஆனால் அது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - "சரி." ஆகவே த்ருʼணாத் அபி ஸுநீசேன: ஒருவர் புல்லைவிட அடக்கமானவராக இருக்க வேண்டும். மேலும் தரோர் அபி ஸஹிஷ்ணுனா. தரோர் அபி ஸஹிஷ்ணுனா... தரோர் என்றால் "மரம்." மரங்கள் மிகவும் சகிப்புத்தன்மை உடையது, சகிப்புத்தன்மைக்கு உதாரணமானது, பல ஆயிரம் வருடங்கள் ஒரே இடத்தில், எதிர்ப்பு தெரிவிக்காமல் நின்று கொண்டிருகிறது." |
681108 - சொற்பொழிவு BS 5.29 - லாஸ் ஏஞ்சல்ஸ் |