"எல்லாம் கிருஷ்ணரின் கட்டளையின் கீழ் விநியோகிக்கப்படுகிறது, ஏனென்றால் பிரக்ருதி இயங்குகிறது, பிரக்ருதி இருக்கின்றது... எப்படி அது இயங்குகிறது? மயாத்யக்ஷேண (BG 9.10). மயாத்யக்ஷேண ப்ரக்ருʼதி꞉ ஸூயதே ஸ சராசரம். "எனது கட்டளையின் கீழ்," கிருஷ்ணர் கூறுகிறார். பிரக்ருதி, இயற்கை, குருட்டுத்தனமாக இயங்கவில்லை. பாருங்கள்? அதற்கு அதன் எஜமானர் இருக்கிறார், கிருஷ்ணர். இந்த வாழ்வு ப்ரஹ்ம-ஜிஜ்ஷாஸா, விசாரணைக்கானது, "பிரமன் என்றால் என்ன?" பிரமனை பற்றி விசாரிப்பதற்கு பதிலாக, பிரமனைக் கொல்ல முயல்கிறார்கள். "ஆத்மா என்பது இல்லை. பரமாத்மா என்பது இல்லை. இயற்கைதான் இப்படி தானாக ஆகுகிறது." இவ்வாறான முட்டாள்தனமான விஷயங்கள் மனித சமூகத்தின் குப்பையான மூளையினுள் புகுத்தப்படுகின்றன."
|