"சமூகம், நட்பு மற்றும் காதல் போன்றவற்றில் கட்டுண்ட நபர்கள், இதுதான் பௌதிக வாழ்க்கைக்கான கவர்ச்சி. "சமூகம், நட்பு மற்றும் காதல்," அவர்கள் நினைக்கிறார்கள், "இது கடவுளே பார்த்து எனக்கு கொடுத்தது." ஆனால், மனிதனுக்கு அது கடவுளே பார்த்து கொடுத்ததன்று. ஆன்மீகக் கண்ணோட்டத்தில், அது மாயையின் பரிசு. 'சமூகம், நட்பு மற்றும் காதல் என்பன மாயாவின் பரிசு, மாயை. உண்மையில், நாம் பழகும் சமூகம், நாம் இங்கு ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு, மற்றும் காதல் என்று அழைக்கப்படுவது, எத்தனை காலம்? இப்பொழுது, சிலவேளை நான் மனித சமுதாயத்தில் இருந்தால். மனித சமுதாயத்தில் நான் எத்தனை காலம் இருப்பேன்? நான் எனது அடுத்த ஜென்மத்திற்கு அல்லது அடுத்த சமுதாயத்திற்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் நாய் சமுதாயத்திற்கு மாற்றப்படலாம். தேவர்களின் சமூகத்திற்கு மாற்றப்படலாம். அது எனது கர்மாவில் தங்கியுள்ளது."
|