"ஹரி ஹரி பிஃபலே ஜனம கோஙாஇநு: "எனதன்பு பகவானே, நான் எனது வாழ்வை பயனின்றி வீணாக்கி விட்டேன்." பிஃபலே என்றால் பயனின்றி, ஜனம என்றால் பிறவி, கோஙாஇநு என்றால் "நான் கழித்தேன்." அவர் ஒரு சாதாரண மனிதனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையை வெறுமனே வீணடித்துக் கொண்டிருப்பது போன்று. அவர்கள் தங்கள் வாழ்வை வீணடித்து கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் நினைக்கிறார்கள் "எனக்கு நல்ல வீடு இருக்கிறது, நல்ல கார் இருக்கிறது, நல்ல மனைவி இருக்கிறாள், நல்ல வருமானம் இருக்கிறது, நல்ல சமூக அந்தஸ்து இருக்கிறது." பல விஷயங்கள். இவையே ஜட கவர்ச்சி."
|