"க்ருʼஹ-க்ஷேத்ர-ஸுத. ஸுத என்றால் குழந்தைகள். வீடு இருக்கும்போது, மனைவி இருக்கும்போது, பின்னர் அடுத்து தேவைப்படுவது குழந்தைகள், ஸுத. ஏனென்றால் குழந்தைகள் இல்லாத இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்காது. புத்ர-ஹீனம்ʼ க்ருʼஹம்ʼ ஷூன்யம் (சாணக்ய பண்டிதர்). இல்லற வாழ்க்கை குழந்தைகள் இல்லாமல் ஒரு பாலைவனம் போன்றது. இல்லற வாழ்க்கையின் கவர்ச்சி குழந்தைகள்தான். க்ர்ஹ-க்ஷேத்ர-ஸுத ஆப்த. ஆப்த என்றால் உறவினர்கள் அல்லது சமூகம். ஸுதாப்த-வித்தை꞉: மேலும் இவ்வெல்லா பரிவாரங்களும் பணத்தினால் பேணப்பட வேண்டியவை. அதனால் பணம் தேவைப்படுகிறது, வித்தை꞉. இவ்வழியில் ஒருவன் இந்த பௌதிக உலகில் சிக்கிக் கொள்கிறான். ஜனஸ்ய மோஹோ (அ)யம். இது மாயை எனப்படும்."
|