TA/681114 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆக இந்த முழு உருவாக்கமும், நாம் பெற்றுள்ள உருவாக்கம் எதுவாக இருப்பினும், அவை இந்த இருபத்து நான்கு ... ஆக்கப்பட்டது. நிறங்களைப் போல். பல வகையான நிறங்களுக்கு அடிப்படையான நிறங்கள்: மஞ்சள், சிவப்பும் நீலமும். நிறங்களை கலப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் இந்த மூன்று நிறங்களை எண்பத்தொன்பது நிறங்களாக கலந்துவிடுவார்கள். மூன்றில் மூன்று ஒன்பது; ஒன்பதில் ஒன்பது எண்பத்தொன்பது. ஆகவே நிபுணர்கள், இந்த மூன்று நிறங்களை எண்பத்தொன்பது நிறங்களாக காட்சி அளிக்கவைப்பார்கள். அதேபோல், பௌதிக இயற்கை... நிச்சயமாக, இது ஒன்று, ஒரு சக்தி. ஆனால் இந்த சக்திக்குள் மூன்று குணங்கள் உள்ளன: சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம். இந்த மூன்று குணங்களின் தொடர்பால், மன꞉, புத்தி, அஹங்கார - சூக்கும உறுப்பு - உற்பத்தியாகிறது, மேலும் சூக்கும உறுப்பிலிருந்து, ஸ்தூலமான உறுப்பு உற்பத்தியாகிறது."
Lecture Excerpt on Twenty-four Elements - - லாஸ் ஏஞ்சல்ஸ்