"கிருஷ்ண உணர்வு, முக்தியடைந்தபின் உள்ள ஒரு நிலையாகும். ப்ரஹ்ம-பூத꞉. ப்ரஹ்ம-பூத꞉. என்றால் "நான் இப்போது அனைத்து ஜட கவலைகளிலிருந்து விடுபட்டுவிட்டேன்." அதை தான் ப்ரஹ்ம-பூத꞉ நிலை என்று அழைக்கின்றோம். எவ்வாறு என்றால் ஒருவர் சிறையில் பல வருடங்கள் துன்பப்பட்டு, பிறகு விடுதலை பெற்றால், "இப்போது உனக்கு விடுதலை," என்றால், அவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான்: "ஓ, எனக்கு இப்போது விடுதலை." பார்த்தீர்களா? எனவே அதுதான் ப்ரஹ்ம-பூத꞉ நிலை. ப்ரஸன்னாத்மா, மகிழ்ச்சி, உடனடியாக. மேலும் மகிழ்ச்சியின் குணம் என்ன? ந ஷோசதி. பெரும் இழப்பு ஏற்பட்டாலும், அங்கு புலம்பல் இருக்காது. மேலும் பெரும் லாபத்திலும், அங்கு மகிழ்ச்சி இருக்காது, அல்லது ஏங்குவதில்லை. அதுதான் ப்ரஹ்ம-பூத꞉ நிலை என்று அழைக்கின்றோம்."
|