"எனவே ஒவ்வொரு மனித சமூகத்திலும் இது போன்ற விசாரணையும் மேலும் அதற்கேற்ற சில பதிலும் இருக்கிறது. எனவே இந்த அறிவை அளிப்பதற்கு கிருஷ்ண உணர்வு, அல்லது பக்தி உணர்வு, அத்தியாவசியமானது. இத்தகைய விசாரணைகளை நாம் மேற்கொள்ளாமல், வெறுமனே மிருக சார்பான செயல்களில் ஈடுபட்டால்... ஏனென்றால் இந்த ஜட உடல் விலங்கு உடல், ஆனால் உணர்வு உருவாகிறது. விலங்கு உடலில், அல்லது விலங்கு உடலைவிட தாழ்ந்த உடலில் - மரங்களும் செடிகளும் போல, அவைகளும் உயிர்வாழிகள் - உணர்வுகள் உருவாக்கப்படவில்லை. நீங்கள் ஒரு மரத்தை வெட்டினால், உணர்வுகள் உருவாக்கப்படாததால், அது எதிர்ப்பு தெரிவிக்காது. ஆனால் அது வலியை உணரும்."
|