TA/681123 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
நர-நாரயன்: பக்தருக்கும் ராதா, ராதிகாவிற்கும் உள்ள சரியான உறவுமுறை என்ன?
பிரபுபாதர்: ராதாராணி தைவீ-மாயா ஆவார். எவ்வாறு என்றால், நம் பௌதிக கட்டுண்ட வாழ்க்கையில், நாம் பௌதிக சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்போம். அதேபோல், நம் விடுபட்ட நிலையில் நாம் ஆன்மீக சக்தியின் கீழ் இருப்போம். அந்த ஆன்மீக சக்திதான் ராதாராணி. தற்சமயம் நாம் பௌதிக சக்தியின் கட்டுப்பாட்டில் நடமாடுகிறோம், ஏனென்றால் நம் உடல் பௌதிக சக்தியாலானது. ஆகையால் நீங்கள் விடுதலை பெற்றதும் உங்கள் உடல் ஆன்மீக சக்தியை உருவாக்கும். அந்த ஆன்மீக சக்திதான் ராதாராணி. எனவே நீங்கள் சில... சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். நீங்களும் சக்திதான்; நீங்கள் நடுதர சக்தி. நடுதர சக்தி என்றால் நீங்கள் ஆன்மீக சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் அல்லது பௌதிக சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் - உங்கள் நடுதர நிலை. ஆனால் நீங்கள் பௌதிக சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அதுதான் உங்கள் ஆபத்தான நிலை, வாழ்க்கையின் போராட்டம். மேலும் நீங்கள் ஆன்மீக சக்தியில் இருக்கும் போது, அதுதான் உங்கள் சுதந்திரமான வாழ்க்கை. ராதாராணி ஆன்மீக சக்தி, மேலும் துர்கா, அல்லது காளி பௌதிக சக்தி ஆவார்கள். |
681123 - சொற்பொழிவு BG As It Is Introduction - லாஸ் ஏஞ்சல்ஸ் |