"கிருஷ்ணர் அவருடைய நண்பரிடமோ அல்லது பக்தரிடமோ தாட்சண்யம் மிக்கவராக இல்லை. ஏனென்றால் அந்த தாட்சண்யம் அவருக்கு உதவாது. அவருக்கு உதவாது. சிலநேரங்களில் பக்தரிடம் கடுமையாக இருப்பது போல் தோன்றும், ஆனால் அவர் கடினமாக இல்லை. ஒரு தந்தையைப் போல் சிலநேரங்களில் கண்டிப்பாக இருப்பார். அது நன்மைக்கே. அது நிரூபிக்கப்படும், எவ்வாறு கிருஷ்ணரின் கண்டிப்பு இரட்சிப்பை அளிக்கும் என்று. கடைசியில் அர்ஜுனர் ஒப்புக்கொள்கிறார், "உங்கள் கருணையால், என் மாயை கடந்துவிட்டது." எனவே இத்தகைய கண்டிப்பால்..., பகவானால் பக்தர்களிடம் காண்பிக்கப்படும் போது சிலநேரங்களில் தவறாக புரிந்துக் கொள்ளபடுகிறது. ஏனென்றால் நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியளிப்பதையே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டோம், ஆனால் சமயத்தில் நமக்கு மகிழ்ச்சியளிப்பது உடனடியாக கிடைப்பதில்லை என்பதை அறிவோம். ஆனால் நாம் ஏமாற்றம் அடையக்கூடாது. நாம் கிருஷ்ணரை சார்ந்திருக்க வேண்டும். அதுதான் அர்ஜுனரின் நிலைப்பாடு."
|