"நீங்கள் தூய்மையான பக்தரை பின்பற்றினால், பிறகு நீங்களும் தூய்மையான பக்தர் தான். ஒருவர் ஒருசதம் தூய்மையாக இருக்க முடியாது, ஏனென்றால் நாம் கட்டுண்ட வாழ்க்கையிலிருந்து நம்மை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் கண்டிப்பாக தூய்மையான பக்தரை பின்பற்றினால், பிறகு நாமும் தூய்மையான பக்தர் தான். இதுவரை நாம் செய்தது, அது தூய்மையானது. எனவே தூய்மையான பக்தர் என்றால் உடனடியாக ஒருவர் ஒருசதம் தூய்மையாக வேண்டும் என்பதல்ல. ஆனால் அவர் கொள்கையில் உறுதியாக இருந்து அதாவது "நாம் ஒரு தூய்மையான பக்தரை பின்பற்றுவோம்," பிறகு அவர் செயல்கள்... அவர் ஒரு தூய்மையான பக்தரை போல சிறந்தவராவார். அது ... இதை நானே சொந்தமாக விவரிக்கவில்லை; இது பாகவதத்தின் விரிவுரை. மஹாஜனோ யேன கத꞉ ஸ பந்தா꞉ (சி.சி. மத்ய 17.186)."
|