"எனவே புத்திசாலியான ஒருவர், இந்த உலகத்தின் நிலை வெறுமனே மாயை என்று புரிந்துக் கொண்டால் ... அந்த, நான் இட்டுக்கட்டிய அனைத்து எண்ணங்களும், "நான்" மேலும் "என்னுடைய," என்னும் கொள்கை அடிப்படையை கொண்டது, இவை அனைத்தும் மாயை. ஆகவே ஒருவர், மாயையிலிருந்து விடுபடும் புத்திசாலியாக இருந்தால், அவர் ஆன்மீக குருவிடம் சரணடைவார். அது அர்ஜுனன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது. அவர் மிகவும் குழப்பமாக இருக்கும் போது... அவர் கிருஷ்ணருடன் ஒரு நண்பனாக உரையாடிக் கொண்டிருந்தார், ஆனால் "இந்த நட்புடனான உரையாடல் என் கேள்விக்கு தீர்வாகாது." என்று உணர்ந்தார். மேலும் அவர் கிருஷ்ணரை தேர்ந்தெடுத்தார்... ஏனென்றால் அவர் கிருஷ்ணரின் மதிப்பை அறிந்திருந்தார். குறைந்தபட்சம், அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும். அவர் நண்பனாவார். மேலும் அவருக்கு தெரியும் கிருஷ்ணர் ஏற்றுக் கொள்ளப்பட்டார்... "அவர் என் நண்பனாக நடித்த போதிலும், உயர்ந்த அதிகாரிகளால் கிருஷ்ணர் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்."
|