"இறந்த உடல், ஒருவேளை உடல் இறந்துவிட்டால், அதறகு மதிப்பில்லை. புலம்புவதால் என்ன பயன்? நீங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு புலம்பலாம், அது மறுபடியும் உயிருடன் வரப்போவதில்லை. எனவே இறந்த உடலை எண்ணி புலம்புவதில் காரணம் இல்லை. மேலும் ஆன்மீக ஆத்மாவை பொறுத்தவரை, அது நித்தியமானது. அது இறந்தது போல் தோன்றினாலும், அல்லது இந்த உடல் இறந்துவிட்டாலும், அது இறப்பதில்லை. எனவே ஏன் ஒருவர் அதிக துக்கமடைய வேண்டும், "ஓ, என் தந்தை இறந்துவிட்டார், என்னுடைய இத்தகைய மற்றும் உறவினர் இறந்துவிட்டார்கள்," மேலும் ஏன் அழுதுக் கொண்டிருக்கிறார்? அவர் இறக்கவில்லை. இந்த அறிவு ஒருவருக்கு இருக்க வேண்டும். பிறகு எந்தநிலையிலும் அவர் சந்தோஷமாக இருப்பார், மேலும் அவருக்கு கிருஷ்ண உணர்வில் ஆர்வம் ஏற்படும். உடல் உயிருடன் இருந்தாலும் அல்லது இறந்தாலும், புலம்ப வேண்டியதேயில்லை. இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் அதை அறிவுறுத்தினார்."
|