"அங்கே கேள்வி இருக்க வேண்டும். பகவத் கீதையில் அது கூறப்பட்டுள்ளது, தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்னேன ஸேவயா (ப.கீ 4.34). உங்களுடைய உறவுமுறை யாதெனில் ஆன்மீக குருவிடமிருந்து அனைத்தையும் அறிந்துக் கொள்வது, ஆனால் மூன்று காரியங்களால் அதை அறிந்துக் கொள்ள வேண்டும். அது என்ன? முதலாவதாக நீங்கள் சரணடையுங்கள். ஆன்மீக குருவை உங்களைவிட சிறந்தவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஒரு ஆன்மீக குருவை ஏற்றுக் கொள்வதில் என்ன பயன்? ப்ரணிபாத். ப்ரணிபாத் என்றால் சரணடைவது; மேலும் பரிப்ரஷ்ன, மேலும் கேள்வி கேட்பது, அத்துடன் சேவா, மேலும் சேவை. அங்கு இரண்டு பக்கம் இருக்க வேண்டும், சேவையும் மேலும் சரணடைதல், மெலும் இடையில் கேள்வியும் இருக்க வேண்டும். இல்லையேல் அங்கே கேள்வியும் பதிலும் இருக்காது. இரண்டு விஷயமும் அங்கு இருக்க வேண்டும்: சேவையும் மேலும் சரணடைதலும். பிறகு கேள்வியின் பதில் நன்றாக இருக்கும்."
|