"நமது செயற்பாடுகள் நிபந்தனைக்குட்பட்டவை, சுதந்திரமானவை அல்ல. ஆனால் சுதந்திரமான, எல்லையற்ற சக்தியுடைய, எல்லையற்ற சந்தோஷம் உடைய, எல்லையற்ற ஆனந்தம் உடைய வாழ்வை பெற முடியும். அதற்கு சாத்தியம் உள்ளது. இது கதையோ, கற்பனையோ அன்று. இந்தப் பிரபஞ்சத்தினுள் பல கிரகங்களை நாம் காண்கிறோம். நம்மிடம் ஏகப்பட்ட பறக்கும் விமானங்கள் இருக்கின்றன, ஆனால் அருகில் உள்ளதை கூட நம்மால் நெருங்க முடியவில்லை, நாம் மிகவும் எல்லைக்கு உட்பட்டவர்கள். ஆனால் நாம் கோவிந்தனை வணங்கினால், பின்னர் அது சாத்தியமாகும். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நாம் இந்த விஷயங்களை ஏனைய கிரகங்களுக்கான இலகுவான பயணம் எனும் நமது சிறிய புத்தகத்தில் எழுதியுள்ளோம். இது சாத்தியம். இந்த கிரகம் தான் எல்லாமே என்று நினைத்து விடாதீர்கள். பற்பல லட்சக்கணக்கான மிக அருமையான கிரகங்கள் இருக்கின்றன. அங்கு உள்ள சந்தோசத்தின் தரம், இன்பத்தின் தரம் நாம் இங்கு அனுபவிப்பதைக் காட்டிலும் பல பல மடங்கு பெரியது."
|