TA/681202b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கஷ்டமான நிலையில் ஒரு நண்பரிடம் சென்று சரணடைந்தால், 'எனது அன்பு நண்பனே, நீங்கள் மிகவும் பெரியவர், மிகவும் சக்தி வாய்ந்தவர், மிகவும் செல்வாக்கு மிக்கவர். நான் இந்த பெரும் ஆபத்தில் இருக்கிறேன். எனவே நான் உன்னிடம் சரணடைகிறேன். தயவுகூர்ந்து எனக்குப் பாதுகாப்பு அளிப்பீராக...' அதை கிருஷ்ணரிடம் செய்யலாம். இங்கு இந்த பௌதிக உலகத்தில், ஒருவரிடம் சரணடைந்தால், அவர் எவ்வளவு பெரியவராயினும், அவர் மறுக்கலாம். அவர் கூறலாம், 'உங்களுக்கு என்னால் பாதுகாப்பு தர முடியாது'. அதுவே இயற்கையான பதில். ஆபத்தில் இருக்கும் போது உற்ற நண்பரிடம் சென்றாலும், 'தயவுகூர்ந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள்', அவர் தயங்குவார், ஏனென்றால் அவரது சக்தி மிகவும் எல்லைக்குட்பட்டது. முதலில் அவர் சிந்திப்பார், 'நான் இந்த நபருக்கு பாதுகாப்பு அளித்தால் எனது நலன் கேள்விக்குள்ளாகுமா? இல்லையா'? அவர் அப்படி நினைப்பார், ஏனென்றால் அவரது சக்தி எல்லைக்குட்பட்டது. ஆனால் கிருஷ்ணர் மிகவும் நல்லவர், மிகவும் சக்தி வாய்ந்தவர், மிகவும் ஐஸ்வரியம் நிறைந்தவர்... அவர் பகவத்கீதையில் அறிவிக்கிறார், எல்லாரும், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஷரணம்ʼ வ்ரஜ (BG 18.66): 'எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிடுங்கள். வெறுமனே என்னிடம் சரணடையுங்கள்'."
681202 - சொற்பொழிவு BG 07.01 - லாஸ் ஏஞ்சல்ஸ்