"சேவை வழங்கும் செயல்முறை எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. எவரும், யாருக்கும் சேவை செய்யாதவர் என்று பூரணமாக இல்லை. அது சாத்தியமில்லை. நான் திரும்பத்திரும்ப விளக்கியுள்ளேன், அதாவது யாருக்காவது சேவை செய்ய எஜமானர் இல்லாவிட்டால், தானாக முன்வந்து ஒரு பூனையையோ நயையோ சேவை செய்வதற்காக தனது எஜமானராக ஏற்றுக்கொள்கிறார். "செல்லப்பிராணி நாய்" என்பது சிறப்பான பெயர்தான், ஆனால் அது சேவை செய்வதாகும். தாய் பிள்ளைக்கு சேவை செய்கிறாள். எனவே பிள்ளை இல்லாதவள், பூனையை தனது பிள்ளையாக ஏற்றுக் கொண்டு சேவை செய்கிறாள். எனவே சேவை செய்யும் மனப்பான்மை எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஆனால் சேவை செய்வதில் அதியுயர் பூரணத்துவம் நாம் பரம பூரண பகவானுக்கு சேவை செய்ய கற்றுக்கொள்ளும் போது ஏற்படுகிறது. அது பக்தி எனப்படுகிறது. மேலும் அந்த பக்தி பகவானுக்கு சேவை செய்வதாகும், அஹைதுகீ. நம்மிடம் சில சிறிய உதாரணங்கள் இருப்பது போன்று. இந்த தாய் தனது பிள்ளைக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்கிறாள்."
|