TA/681204 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பொதுவாக, மக்கள், புலன்களின் வேலைக்காரனாக இருக்கிறார்கள். மக்கள் புலன்களின் வேலைக்காரனாவதிற்கு பதிலாக அதன் எஜமான் ஆனால், பிறகு அவன் சுவாமீ என்று அழைக்கப்படுகிறான். சுவாமீ என்றால் இந்த உடை அல்ல. இந்த உடை மிதமிஞ்சியது, சும்மா... எங்கும் சில சீருடை இருக்கிறது "அவன் அவன்தான்." என்று புரிந்துக் கொள்வதற்காக. உண்மையில், சுவாமீ என்றால் புலன்களை தன் கட்டுப்பாடிற்குள் வைத்திருப்பவர். மேலும் அதுதான் பிராமண கலாச்சாரம். ஸத்ய ஷம தம திதிக்ஷ ஆர்ஜவம், ஜ்ஞானம் விஜ்ஞானம் ஆஸ்திக்யம்ʼ ப்ரஹ்ம-கர்ம ஸ்வபாவ-ஜம் (ப.கீ.18.42). பிராம. பிராம என்றால் பிராமண, பிராமண கலாச்சாரம். உண்மைத்தன்மை, தூய்மை, மேலும் புலன்களை கட்டுப்பாடிற்குள் வைத்திருப்பவர், மனதை கட்டுப்படுத்துபவர், மேலும் எளிமையும் சகிப்புத்தன்மையும், நிறைந்த அறிவு, வாழ்க்கையில் நடைமுறை முயற்சி, தெய்வ நம்பிக்கை - இந்த தகுதிகள் தான் பிராமண கலாச்சாரம். இந்த தகுதிகளை எங்கே நாம் பயிற்சி செய்தாலும், அவன் பிராமண கலாச்சாரத்தை புதுப்பிப்பான்."
681204 - சொற்பொழிவு - லாஸ் ஏஞ்சல்ஸ்