TA/681209 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு வைஷ்ணவ, அல்லது பகவானின் பக்தர், அவருடைய வாழ்க்கை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா - உங்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - பகவான் ஏசு கிறிஸ்து எவ்வாறு, அவர் கூறினார் உங்கள் பாவச் செயல்களுக்காக அவர் தன்னையே தியாகம் செய்கிறார் என்று. அதுதான் பகவானின் பக்தர்களின் உறுதியான செயல். அவர்கள் தனிபட்ட வசதியை பற்றி கவலைபடமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கிருஷ்ணரை, அல்லது பகவானை நேசிக்கிறார்கள், ஆகையினால் அவர்கள் அனைத்து உயிர்வாழிகளையும் நேசிக்கிறார்கள், ஏனென்றால் அனைத்து உயிர்வாழிகளும் கிருஷ்ணருடன் உறவு கொண்டுள்ளனர். எனவே அதேபோல், நிங்களும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் வைஷ்ணவராக வேண்டும் மேலும் மனிதகுலத்தின் துன்பத்தை உணர வேண்டும்."
Lecture Festival Disappearance Day, Bhaktisiddhanta Sarasvati - - லாஸ் ஏஞ்சல்ஸ்