"காரியங்கள் இந்த நிலைக்கு வந்துவிட்டது, அதாவது இந்த முதுமையான வயதில் நான் உங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறேன், மேலும் நீங்களும் இந்த இயக்கத்தை தீவிரமாக ஏற்றுக் கொண்டு, அதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறீர்கள். இப்போழுது நம்மிடம் சில புத்தகங்கள் இருக்கின்றன. எனவே இந்த இயக்கத்தில் ஒரு சிறிய ஆதாரம் இருக்கிறது. என் ஆன்மீக குருவின் மறைந்த நாளின் விழாவில், அவருடைய விருப்பத்தை செயல்படுத்த நான் முயற்சி செய்துக் கொண்டிருப்பதால், அதேபோல், அதையே என் விருப்பமாகவும் செயல்படுத்த நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு முதியவன். நானும் எந்த கணமும் இறந்து போகலாம். அது இயற்கையின் நீதி. ஒருவராலும் அதை நிறுத்த முடியாது. எனவே அது மிகவும் வியக்கத்தக்க விஷயமல்ல. ஆனால் என் குரு மஹாராஜ் மறைந்த நாளான இந்த மங்களகரமான நாளில் என் வேண்டுகோள் யாதெனில், அதாவது குறைந்தபட்சம், ஓர் அளவிற்கு நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சாரத்தை புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். அது மேன்மேலும் வளர நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்."
|