TA/681211 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பாகவதம் கூறுகிறது, நைஷாம்ʼ மதிஸ் தாவத் உருக்ரமாங்க்ரிம் (SB 7.5.32). யாராவது உருக்ரமாங்க்ரியை அல்லது முழு முதற் கடவுளை புரிந்து கொண்டால், அவனுக்கு ஆத்மாவின் இருப்பை புரிந்து கொள்வது கடினமானதல்ல. எப்படியெனில், சூரிய கோளத்தை பார்த்தவனுக்கு சூரிய ஒளி என்னவென்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்காததைப் போன்று. ஆனால் நிரந்தரமாக இருளில் இருப்பவன், சூரிய ஒளியையும் பார்த்திருக்க மாட்டான், சூரிய கோளத்தையும் பார்த்திருக்க மாட்டான், அவனுக்கு ஒளி என்பது என்ன, சூரியன் என்பது என்ன, என்பவற்றை புரிந்து கொள்வது மிகவும் கடினம். உருக்ரமாங்க்ரிம், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளை புரிந்து கொள்ள முடியாது. மேலும் புரிந்து கொண்டால், ஸ்ப்ருʼஷத்ய் அனர்தாபகமோ யத்-அர்த꞉. உருக்ரமாங்க்ரிம், பெரியவரான கடவுளை ஒருவன் புரிந்து கொண்டால், பின்னர் உடனடியாக அவனது அறியாமையும் மாயையும் முடிந்துவிடும்."
681211 - சொற்பொழிவு BG 02.27-38 - லாஸ் ஏஞ்சல்ஸ்