TA/681213 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் இவ்வாறு நினைத்தால் அதாவது "நான் பாதி நீரும், பாதி பாலும் வைத்துக் கொள்வேன்," அவ்வாறு செய்யலாம், ஆனல் இரண்டுமே நீர்த்து போகும் அல்லது மாசு அடைந்துவிடும். நீங்கள் பாலை வைத்துக் கொள்ள விரும்பினால், பிறகு நீங்கள் நீரை வீசிவிடவேண்டும், மேலும் நீரை வைத்துக் கொள்ள விரும்பினால், பிறகு நீங்கள் பாலை வைத்துக் கொள்ள முடியாது. அதேபோல், பக்தி பரேஷானுபவ꞉. இதுதான் சோதனை. நீங்கள் கிருஷ்ண பக்தனாக ஆனால், ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றமடைந்தால், விகிதாசாரமாக நீங்கள் பௌதிக வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்படுவீர்கள். அதுதான் சோதனை. "நான் அதிகமாக தியான செய்கிறேன், நான் சிறந்த முன்னேற்றம் அடைகிறேன்," என்று வெறுமனே யோசிப்பது சரியல்ல. நீங்கள் சோதனை செய்ய வேண்டும். அந்த சோதனை தான் உங்களுடைய... ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் என்றால், அதாவது நீங்கள் பௌதிக வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்படுகிறீர்கள்."
681213 - சொற்பொழிவு BG 02.40-45 - லாஸ் ஏஞ்சல்ஸ்