"முழு பௌதிக சக்தியும் நம் ஒவ்வொறுவரையும் இந்த அழகினால், பெண்மையின் அழகினால் மயக்குகிறது. உண்மையில், அங்கே அழகில்லை. அது மாயை. ஷங்கராசார்ய கூறுகிறார் "நீங்கள் இந்த அழகை நோக்கி செல்கிறீர்கள், ஆனால் இந்த அழகை பகுப்பாய்வு செய்தீர்களா, அழகு என்பது என்ன?" ஏதத் ரக்த-மாம்ʼஸ-விகாரம். இது நம் மாணவி கோவிந்த தாஸி மேலும் நர-நாராயண வடிவமைக்கும் பாரிஸ் பூச்சு போல தான். தற்சமயம், அதில் கவர்ச்சி இல்லை. ஆனால் இந்த பாரிஸ் பூச்சு, அழகா, வர்ணம் பூசப்பட்டால், அது மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். அதேபோல், இந்த உடல் இரத்தம் மேலும் தசைகள், நரம்புகளின் சேர்க்கையாகும். உங்கள் உடலின் மேல் பகுதியை வெட்டி, உடனடியாக உள்ளே பார்த்தீர்களானால், அருவருப்பான, பயங்கரமான விஷயங்கள் இருக்கும். ஆனால் வெளிப்புறமாக மாயாவின் மாயை வர்ணங்கள் பூசப்பட்டிருக்கும், ஓ, அது மிகவும் கவர்ச்சியாக தோன்றும். மேலும் அதுதான் நம் புலன்களை கவர்கிறது."
|