"நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. உங்கள் காதை பகவத் கீதை உண்மையுருவில், கேட்பதில் ஈடுபடுத்துங்கள், அனைத்து முட்டாள்தனத்தையும் மறந்துவிடுவீர்கள். உங்கள் கண்களை கிருஷ்ணரின் ஸ்ரீ மூர்தியின் அழகை காண்பதில் ஈடுபடுத்துங்கள். உங்கள் நாக்கை கிருஷ்ண பிரசாதம் சுவைப்பதில் ஈடுபடுத்துங்கள். உங்கள் கால்களை இந்த கோவிலுக்கு வருவதில் ஈடுபடுத்துங்கள். உங்கள் கைகளை கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் ஈடுபடுத்துங்கள். உங்கள் மூக்கை கிருஷ்ணருக்கு வழங்கப்பட்ட பூக்களை வாசனை பிடிப்பதில் ஈடுபடுத்துங்கள். பிறகு உங்கள் புலன்கள் எங்கு செல்லும்? அது சுற்றிலும் வசீகரிக்கப்பட்டுவிட்டது. பூரணத்துவம் நிச்சயம். உங்கள் புலன்களை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்த வேண்டியதில்லை - பார்க்காதீர்கள், அதைச் செய்யாதீர்கள், அதைச் செய்யாதீர்கள். இல்லை. நீங்கள் ஈடுபாடுகளை, நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு உதவியாக இருக்கும்."
|