"எவ்வாறு என்றால் ஜகாய்-மாதாய் போல். ஜகாய்-மாதாய், இவர்கள் சைதன்ய மஹாபிரபு காலக் கட்டத்தில் மிகப்பெரிய பாவச்செயல்களை புரிந்தவர்கள். எனவே அவர்கள் பகவான் சைதன்ய மஹாபிரபுவிடம் பாவமன்னிப்பு கேட்டு சரணடைந்து "என் பகவானே, நாங்கள் பல பாவச்செயல்களை செய்திருக்கின்றோம். தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள்," அதற்கு சைதன்ய மஹாபிரபு அவர்களை கேட்டார் "சரி, நான் உங்களை ஏற்றுக் கொண்டு மேலும் காப்பாற்றுகிறேன், மேற்கொண்டு நீங்கள் இனிமேலும் இத்தகைய பாவச்செயல்களை செய்யமாட்டோம் என்று சத்தியம் செய்ய வேண்டும்." என்றார். அவர்கள் சம்மதித்தனர், "ஆம், இதுவரை நாங்கள் செய்தது எதுவாக இருப்பினும், அவ்வளவுதான். இனிமேலும் அவ்வாறு செய்யமாட்டோம்." பிறகு சைதன்ய மஹாபிரபு அவர்களை ஏற்றுக் கொண்டார் மேலும் அவர்கள் சிறந்த பக்தர்களானார்கள், அவர்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருந்தது. அதே செயல்முறைதான் இங்கும் இருக்கிறது. இந்த தீட்ஷை பெறுவது என்பது நீங்கள்..., எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும், அதாவது எத்தகைய பாவச்செயல்களை உங்கள் கடந்த வாழ்க்கையில் செய்திருந்தாலும், அது இப்போழுது, கணக்கு மூடப்பட்டுவிட்டது."
|