"மனித வாழ்க்கை மிகவும் குறுகியது. நாம் எப்பொழுது இறப்போம் என்று நமக்கு தெரியாது. அதற்கு முன்பாக, அடுத்த பிறவிக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த பிறவி என்றால் நேரடியாக திரும்பவும் கிருஷ்ணரிடம் போய் சேருவதாகும், உயர்ந்த பூரணத்துவம். நீங்கள் பகவத் கீதையில் காண்பதுபோல், யாந்தி தேவ-வ்ரதா தேவான் பித்ரூʼன் யாந்தி பித்ருʼ-வ்ரதா꞉ (ப.கீ. 9.25). அங்கே எண்ணற்ற விதவிதமான கிரகங்கள் உள்ளன. உயர்ந்த கிரக அமைப்பு, அதில் தேவர்கள் வாழ்கிறார்கள், மிகவும் சக்தி வாய்ந்தது. அங்கு மனிதர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள், அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். எனவே நீங்கள் அங்கே செல்லலாம். சந்திர கிரகம், சூரிய கிரகம் - இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது - நீங்கள் அதற்கேற்ப நடந்துக் கொண்டால், அது பரிந்துரைக்கப்பட்டது போல, அதாவது "நீங்கள் சந்திர கிரகத்திற்கு செல்ல வேண்டுமென்றால், நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்," பிறகு ஆன்மா இந்த உடலை விட்டுச் செல்லும் போது, நீங்கள் அங்கு போகலாம். அதேபோல், நீங்கள் எந்த கிரகத்திற்கும் போகலாம். அதேபோல், நீங்கள் கிருஷ்ணரின் கிரகத்திற்கும் போகலாம்."
|