"எனவே இது ஒரு வாய்ப்பு. நீங்கள் மானிட வாழ்க்கையை பெற்றிருக்கிறீர்கள். இப்போது உங்களுக் எங்களுடைய சேர்க்கை கிடைத்துள்ளது. பகவத் கீதையிலிருந்து அனைத்து தகவலும் பெற்று இருக்கிறீர்கள். எனவே ஒரு வாய்ப்பு அங்கிருக்கிறது. இப்போழுது நிங்கள் அதை பயன்படுத்த வில்லையென்றால், பிறகு நீங்கள் தற்கொலை செய்துக் கொள்ளலாம். ஒருவரும் உங்களை கவனிக்கமாட்டார்கள். இல்லையென்றால், நீங்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி, மேலும் நேரடியாக கிருஷ்ணரிடம் செல்லலாம். ஆகவே இதுதான் செயல்முறை. தீட்ஷை என்றால் அந்த பூரணத்தின் துவக்க நிலை. ஒருவர் அதை சரியாக பயன்படுத்த வேண்டும், பிறகு எந்த சந்தேகமும் இருக்காது. பகவத் கீதையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் உறுதியளிக்கிறார், நீங்கள் கிருஷ்ணரை நம்பினால், அவர் முழுமுதற் கடவுள் என்பதை நம்பினால், பிறகு எவ்வித சந்தேகமும் இருக்கக் கூடாது. மேலும் நாம் கிருஷ்ண உணர்வை செயல்படுத்துவோம், விதிகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுவோம், பிறகு நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி தான்."
|