"இது ஒரு முக்கியமான விஷயம். சிலசமயம் ஆன்மீக வாழ்வு என்பது சுறுசுறுப்பான வாழ்விலிருந்து ஓய்வு பெறுவது என்று நினைக்கிறார்கள். அதுதான் பொதுவாக நிலவும் கருத்து. ஆன்மீக அறிவை விருத்தி செய்வதற்கு அல்லது தன்னுணர்வை பெறுவதற்கு இமயமலையின் குகைகளுக்கு அல்லது தனியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதுவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அவ்வகையான பரிந்துரை கிருஷ்ண உணர்வின் செயல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாதவர்களுக்கானது. பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு, எப்படி ஒருவன் தனது நிலையில் இருந்து கொண்டு, அவன் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, இருந்தும் அவனால் கிருஷ்ண உணர்வில் பக்குவமடைய முடியும் என்று கற்பிக்கிறார்."
|