"நரோத்தம தாஸ டாகுர ஆலோசனை கூறுகிறார், 'தயவு செய்து பகவான் நித்யானந்தரிடம் தஞ்சம் அடையுங்கள்'. பகவான் நித்யானந்தரின் கமலப் பாதங்களில் தஞ்சம் அடைவதில் என்ன முடிவு ஏற்படும்? அவர் கூறுகிறார் அதாவது ஹேனோ நிதாஇ பினே பாஇ: "நித்யானந்தரின் கமலப் பாதங்களின் நிழலில் தஞ்சம் அடையாவிட்டால்," ராதா-க்ருʼஷ்ண பாஇதே நாஇ, 'ராதா-கிருஷ்ணரை அணுகுவது மிகவும் கஷ்டமாக இருக்கும்'. ராதா-கிருஷ்ண... இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ராதா-கிருஷ்ணரை அணுகுவதிற்காக தான், பரம புருஷருடன் அவருடைய உயர்ந்த மகிழ்ச்சியான நடனத்தில் இணைந்து கொள்வதற்கு. இதுதான் கிருஷ்ண உணர்வின் நோக்கம். எனவே நரோத்தம தாஸ டாகுர ஆலோசனை கூறுகிறார் அதாவது 'நீங்கள் உண்மையில் ராதா-கிருஷ்ண நடனத்தில் கலந்துக் கொள்ள விரும்பினால், பிறகு நீங்கள் நித்யானந்தரின் கமலப் பாதங்களின் தஞ்சம் அடைய வேண்டும்."
|