"ஒரு குறும்புக்கார பையனைப் போல. வற்புறுத்தலால், அவன் குறும்புத்தனத்தை தடுக்கலாம். ஆனால் அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்ததும், மறுபடியும் அதையே செய்வான். அதேபோல், புலன்கள் மிகவும் வலுவானது. அதை செயற்கையாக உங்களால் நிறுத்த முடியாது. ஆகையினால் அதற்கு ஒரே தீர்வு கிருஷ்ண பக்தியே. கிருஷ்ண உணர்வில் இருக்கும் இந்த சிறுவர்கள், இதுவும் புலன் நிறைவு - பிரசாதம் உட்கொள்வது, நடனமாடுவது, ஜெபிப்பது, தத்துவம் படிப்பது - ஆனால் அது கிருஷ்ண சம்மந்தப்பட்டது. அது குறிப்பிடத்தக்கது. நிர்பந்த꞉ க்ருʼஷ்ண-ஸம்பந்தே (பக்தி-ரஸாம்ருʼத-ஸிந்து 1.2.255). இது கிருஷ்ணர் மீதான புலன் நிறைவு. நேரடியாக அல்ல, ஆனால் நான் கிருஷ்ணரின் அங்க உறுப்பானதால், என் புலன்கள் தானாக திருப்தியடைகிறது. இந்த செயல்முறை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். செயற்கையாக... இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் வாழும் கலையாகும், இதனால் உங்கள் புலன்கள் முழுமையாக திருப்தியடைவதை உணர்வீர்கள், எனவே அடுத்த பிறவியில் விடுதலை அடைவீர்கள். இதுதான் இனிமையான செயல்முறை."
|