"கிருஷ்ணரால் அர்ஜுனனுக்காக போரிட இயலும். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இருப்பினும், அவர் அர்ஜுனனை அதில் ஈடுபடுத்த விரும்பினார். அதாவது ஒருவர் கிருஷ்ண உணர்வில் அவருடைய பரிந்துரைக்கப்பட்ட கடமைகளுடன் ஈடுபட வேண்டும், அதுதான் தேவைப்படுகிறது. ஆம். "உனக்கு பரிந்துரைக்கப்பட்ட கடமையை நிகழ்த்து, வேலை செய்யாமல் இருப்பதைவிட அது சிறந்தது." கிருஷ்ண உணர்வில் உங்களால் வேலை செய்ய முடியாவிட்டால், வர்ணாஷ்ரம்படி உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கடமையை நிகழ்த்துங்கள். எவ்வாறு என்றால், நீங்கள் ஒரு பிராமணராக இருந்தால், அதற்கேற்ப நீங்கள் செயல்பட வேண்டும். நீங்கள் ஒரு ஷத்திரியரானால், நீங்கள் அதற்கேற்ப வேலை செய்ய வேண்டும். ஆனால் வேலை செய்வதை நிறுத்தாதீர்கள். கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "வேலை செய்யாமல் ஒரு மனிதனால் தன் உடலைகூட பராமரிக்க முடியாது."
|