TA/681223c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"முழு பௌதிக நாகரீகமும் வாழ்க்கையில் கடினமாக போராடும் ஒரு செயல்முறை, இதன் முடிவு பிறப்பு, இறப்பு, முதுமை மேலும் நோய். மனித சமுதாயம் இந்த நிரந்தரமான வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு எதிராக பல வழிகளில் பலனில்லாமல் போராடுகிறார்கள். சிலர் பௌதிக முயற்சி செய்கிறார்கள் மேலும் சிலர் ஓரளவுக்கு ஆன்மீக முயற்சி செய்கிறார்கள். ஜட செயல்களில் ஆழ்பவர்கள் விஞ்ஞான அறிவை அடைவதன் மூலம் பிரச்சனைகளுக்கு திர்வு காண முயற்சி செய்கிறார்கள், கல்வி, தத்துவம், ஒழுக்கம், நெறிமுறை, கவிதை சிந்தனை முதலியன, மேலும் ஆன்மீகவாதிகள், பகுத்தறியும்
வெவ்வேறு ஆய்வறிக்கைகள் மூலம் ஆன்மாவிலிருந்து பல வழியில், பிரச்சனைகளுக்கு திர்வு காண முயற்சி செய்கிறார்கள். மேலும் சிலர் ஆன்மீக யோகிகளாக சரியான முடிவுக்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் எல்லோரும் நிச்சயமாக தெரிந்துக் கொள்ள வேண்டியது யாதெனில் இந்த காலியுகத்தில், அல்லது சண்டையும் கருத்து வேறுபாடும் உள்ள இந்த யுகத்தில் கிருஷ்ண உணர்வின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளாமல் வெற்றி சாத்தியமில்லை." |
Lecture Recorded to Members of ISKCON London - - லாஸ் ஏஞ்சல்ஸ் |