"இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் வாழ்க்கையின் ஒரு சிறந்த கலை, மிகவும் எளிதானது மேலும் உயர்ந்தது. இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், எவ்விதமான செயற்கை முயற்சி இல்லாமல், உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறது. அது நித்தியமான நிறங்களுடன் மேலும் நிறைந்த நித்தியமான மகிழ்ச்சி கொண்டுள்ளது. நாங்கள் இந்த கிருஷ்ண உணர்வின் செயல்களை பாடுவதாலும், நடனமாடுவதாலும், உண்பதாலும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட சீடர் தொடர் மூலம் பெற்ற தத்துவங்களை பற்றி பேசுகிறோம், ஆகையினால் அது எங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறது, எங்கள் இயற்கையான உள்ளுணர்வில் எவ்விதமான செயற்கையான மாற்றமும் இல்லாமல் நடைபெறுகிறது. அந்த உணர்வு உங்களுக்குள் இருக்கிறது, ஆனால் அது தற்சமயம் அழுக்கு படிந்த உணர்வாக இருக்கிறது, மேலும் நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில் அதில் படிந்து இருக்கும் அனைத்து அழுக்கையும் சுத்தம் செய்து மேலும் இனிமையன முறையில் இருக்கும் தெளிவான கிருஷ்ண உணர்வாக்குங்கள், பகவானின் புகழப்பட்ட புனிதமான நாமத்தை உச்சாடனம் செய்வதின் மூலம்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா, ராமா, ஹரே ஹரே."
|