"மன்னன் குலசேகரர் "எல்லாமே தலைகீழாக மாறிவிடும் அந்த நேரம் வரை என்னால் காத்திருக்க முடியாது. தற்போது என் மனம் நன்றாக இருக்கிறது. என்னை தங்கள் தாமரை திருவடித் தண்டில் உடனடியாக நுழைய விடுங்கள்" என்று கூறுகிறார். அதன் அர்த்தம் அவர் பிரார்த்திக்கிறார், "எனது வாழ்வின் நன்நிலையிலேயே இறக்கவிடுங்கள், எனவேதான் என்னால் தங்கள் தாமரைத் திருவடிகளை நினைக்க முடியும்." வேறு வகையில் கூறுவதானால், நாம் நமது மனம் நன்னிலையில் இருக்கும்போதே கிருஷ்ணரது தாமரைத் திருவடிகளில் மனதைப் பதிக்க பயிலாவிட்டால், மரணத்தருவாயில் எப்படி அவரைப்பற்றி நினைப்பது சாத்தியமாகும்?" என்று நமக்கு அவர் பாடம் புகட்டுகிறார்"
|