"இதுவரை இந்த இயக்கம் சம்பந்தப்பட்டு, அதற்கும் இந்த சந்திர கிரகம் பயணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், நாம் பொதுவாக பின்பற்றும் அதிகாரபூர்வமான வேதத்தில், ஒரு அறிக்கை அதாவது ஒருவர் சந்திர கிரகத்திற்குச் செல்ல ஊக்குவிக்கிறது, வேறுபட்ட வழிபடும் செயல்முறைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வாறு என்றால் பகவத் கீதையில் கூறியது போல் அதாவது யாந்தி தேவ-வ்ரதா தேவான் (ப.கீ. 9.25): தேவர்களை வழிபடுபவர்கள், குறிப்பிட்ட தேவர்களின் வேறுபட்ட கிரகத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள்."
|