"எனவே கிருஷ்ணர் கூறுகிறார், நாம் கிருஷ்ண பக்தி மக்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று. கிருஷ்ணர் எதைச் சொன்னாலும் நாம் அதை தெய்வீகமான உண்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகையினால், கிருஷ்ணர் கூறுகிறார் நீங்கள் உயர்ந்த கிரகமான பிரமலோகத்திற்கு செல்ல முயற்சித்தாலும் கூட. வேத இலக்கியத்தில் கூறியிருப்பது போல அங்கே பல கிரக அமைப்பு உள்ளன. நாம் இப்போது இருக்கும் இந்த கிரகம் அமைப்பு, பூர்-லோக என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரக அமைப்புக்கு மேல் புவர்-லோக இருக்கிறது. அந்த கிரக அமைப்புக்கு மேல் ஸ்வர்கலோக இருக்கிறது. இந்த சந்திரன் ஸ்வர்கலோக அமைப்பைச் சேர்ந்தது. ஸ்வர்கலோகத்திற்கு மேல் ஜனலோக இருக்கிறது. மேலும் அதற்கும் மேல் மஹர்லோக இருக்கிறது, அதற்கும் மேல் ஸத்யலோக இருக்கிறது."
|