"அது ஒரு நல்ல கதை. ஒருவர் எவ்வாறு சந்திரனுக்குச் சென்றார், எவ்வாறு மறுபடியும் திரும்பி வந்தார். இவை அனைத்தும் வேத இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் நம் குறிக்கோள் என்ன? நம் குறிக்கோள் வேறுபட்டது. நாம் நம்முடை விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிக்கப் போவதில்லை, கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது இந்த முயற்சிகளில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். அதாவது நீங்கள் இந்த கிரகத்திற்கு செல்வீர்க்ள், அந்த கிரகத்திற்கு, அந்த கிரகத்திற்கு, அந்த கிரகத்திற்கு. நீங்கள் என்ன ஆதாயம் பெறுவீர்கள்? நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் பௌதிக துன்பங்கள் உங்களை தொடரும்."
|