"கௌராங்க போலிதே ஹபே புலக-ஷரீர. இதுவே உச்சாடனம் செய்வதன் பூரணத்துவம், அதாவது சங்கீர்த்தன இயக்கத்தை ஆரம்பித்த பகவான் கௌரங்கரின் நாமத்தை உச்சாடனம் செய்தவுடன் அல்லது எடுத்துக்கொண்டவுடன் உடனடியாக உடலினுள் ஒரு நடுக்கம் ஏற்படும். அது நகல் செய்யப்படக் கூடாது. பகவான் கௌரங்கரின் நாமத்தை உச்சாடனம் செய்தவுடன் உடலினுள் நடுக்கம் ஏற்படும் அந்த சரியான தருணம் எப்பொழுது நமக்கு கிடைக்கும் என்று நரோத்தம தாஸ் தாகூரர் பரிந்துரைக்கின்றார். மேலும் நடுக்கத்தின் பின்னர், ஹரி ஹரி போலிதே நயனே ப(அ)பே நீர், ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்யும் போது கண்களில் நீர் ததும்பும்."
|