"ஹரிதாஸ் தாகூரரைப் போன்று, ஹரிதாஸ் தாகூரர் தனிமையான ஓரிடத்தில் எப்போதும் ஜபம் செய்து கொண்டிருந்தார். இப்பொழுது யாராவது அவ்வாறான உயர்ந்த நிலைக்கு உயர்வு பெறாமல் நகல் செய்தால், "ஓ, ஹரிதாஸ் தாகூரர் ஜெபம் செய்தார். நாமும் தனிமையான ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஜெபம் செய்வோம்," அவனால் அதைச் செய்ய முடியாது. அது சாத்தியமில்லை. அவன் வெறுமனே நகல் செய்துகொண்டு முட்டாள்தனமாக ஏதாவது செய்து கொண்டிருப்பான். எனவே எல்லோரும் தம்முடைய கடமையில் ஈடுபட்டிருக்கும் அதேசமயம் தங்களது கடமையின் பலனைக் கொண்டு கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும். நம்மால் ஹரிதாஸ் தாகூரரை நகல் செய்ய முடியாது. அது வேறொரு நிலை. ஒருவன் அந்த நிலைக்கு உயர்த்தப்பட்டால் அது வேறு விஷயம், ஆனால் பொதுவாக அது சாதாரண மனிதனுக்கானதல்ல. எனவே எல்லோரும் தங்களது கடமையை செய்யும் அதே சமயம் தனது கடமையின் பலனை கொண்டு பகவானுக்கு சேவை செய்ய முயற்சிக்க வேண்டும்."
|