"உன்னுடைய மதத்தை கைவிட்டுவிடு. நம்முடன் வந்துவிடு" என்று நாம் கூறுவதில்லை. ஆனால், குறைந்தபட்சம் உங்களுடைய கொள்கைகளையாவது கடைபிடியுங்கள். ஒரு மாணவனைப் போல. சிலவேளைகளில் இந்தியாவில் இது நடக்கும், அதாவது இந்திய பல்கலைகழகத்தில் எம்.ஏ பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் மேலும் படிக்க வெளிநாட்டுக்குச் செல்வார்கள். எனவே ஏன் அவன் வருகின்றான்? மேலதிக அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக. இதேபோல, எந்த மத நூலை நீங்கள் பின்பற்றினாலும் சரி, இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் மேலதிக ஞானத்தை பெற்றால், நீங்கள் கடவுளைப் பற்றி தீவிரமாக இருக்கும் பட்சத்தில், அதை நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?"
|