TA/681230e உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உலகம் பூராகவும் பகவத்கீதை ஒவ்வொரு நாளும் படிக்கப்படுகின்றது, ஆனால் அதனை புரிந்து கொள்கிறார்கள் இல்லை. வெறுமனே பகவத் கீதையின் மாணவனாக ஆகுவது அல்லது தவறாக "நான் கடவுள்" என்று நினைப்பது. அவ்வளவுதான்.‌ அவர்கள் குறிப்பாக எந்த தகவலையும் பெற்றுக்கொள்வதில்லை. எட்டாவது அத்தியாயத்தில் ஒரு பதம் உள்ளது. பரஸ் தஸ்மாத் து பாவோ (அ)ன்யோ (அ)வ்யக்தோ (அ)வ்யக்தாத் ஸனாதன꞉ (BG 8.20): இந்த பௌதிக இயற்கைக்கு அப்பால் நித்தியமான இன்னொரு இயற்கை உள்ளது. இந்த இயற்கை படைக்கப்பட்டு மீண்டும் அழிக்கப்படுகிறது. ஆனால் அந்த இயற்கை நித்தியமானது. இவ்வாறான விஷயங்கள் அங்கு இருக்கின்றன."
681230 - Interview - லாஸ் ஏஞ்சல்ஸ்