"பகவத் கீதையில் இது கூறப்பட்டுள்ளது அதாவது உங்கள் மனதை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், பிறகு உங்கள் மனம்தான் உங்களுக்கு சிறந்த நண்பன். ஆனால் மனதை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை என்றால் அதுதான் உங்களுக்கு மிகப்பெரிய எதிரி. எனவே நாம் நண்பனா அல்லது எதிரியா என்று யோசிக்க வேண்டும், இரண்டும் நமக்குள் அமர்ந்திருக்கிறது. மனதின் தோழமையை நாம் பயன்படுத்த முடிந்தால், பிறகு நாம் உயர்ந்த பரிபூரணமான நிலைக்கு உயர்த்தப்படுவோம். ஆனால் மனதை என் எதிரியாக உருவாக்கினால், பிறகு எனக்கு நரகத்திற்கு செல்லும் வழி தெளிவாக இருக்கும்."
|