"கோவிந்த தாஸ டாகுர, அவர் தன் மனதை கேட்கிறார்: 'என் அன்பு மனமே, நீ சும்மா உன்னை அபய-சரணாரவிந்தரின் கமலப் பாதங்களில் ஈடுபடுத்திக்கொள்'. அதுதான் கிருஷ்ணரின் கமலப் பாதங்களின் பெயர். அபய என்றால் அச்சமற்ற. நீங்கள் கிருஷ்ணரின் கமலப் பாதங்களின் பாதுகாப்பை பெற்றால் நீங்கள் உடனடியாக அச்சமற்று இருப்பீர்கள். எனவே அவர் ஆலோசனை கூறுகிறார் 'என் அன்பு மனமே, நீ சும்மா உன்னை கோவிந்தாவின் கமலப் பாதங்களில் சேவை செய்வதில் ஈடுபடுத்திக்கொள்'. பஜஹூ ரே மன ஷ்ரீ-நந்த-நந்தன. அவர் 'கோவிந்தா' என்று சொல்லவில்லை. அவர் கிருஷ்ணரை 'நந்த மஹாராஜாவின் மகன்' என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் அந்த கமலப் பாதங்கள் அச்சமற்றது, மாயாவின் தாக்கம் பற்றிய அச்சம் இனியும் இருக்காது."
|