"வந்தே (அ)ஹம் என்றால் 'நான் என்னுடைய மரியாதைக்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'. வந்தே. வ-ந்-தே. வந்தே என்றால் 'என்னுடைய மரியாதைக்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'. அஹம். அஹம் என்றால் 'நான்'. வந்தே (அ)ஹம் ஷ்ரீ-குரூன்: அனைத்து குருமார்களும், அல்லது ஆன்மீக குருமார்களும். ஆன்மீக குருவிற்கு மரியாதைக்குரிய வணக்கத்தை நேரடியாக தெரிவிப்பது என்பது முந்தைய ஆசார்யர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவிப்பதாகும். குரூன் என்பது பன்மையில் எண்ணிக்கை. ஆசார்யர்கள் அனைவரும். அவர்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவர்கள் அல்ல. ஏனென்றால் அவர்கள் மூலமான ஆன்மீக குருவின் சீடர் தொடரில் வந்தவர்கள், மேலும் அவர்களுக்கு வேறுபட்ட கருத்து நோக்கமும் இல்லை, ஆகையினால், அவர்கள் பல பேராக இருந்தாலும், அவர்கள் ஒறுவரே. வந்தே (அ)ஹம் ஷ்ரீ-குரூன் ஷ்ரீ-யுத-பத-கமலம். ஷ்ரீ-யுத என்றால் 'அனைத்து மகிமைகள், அனைத்து செழுமை'. பத-கமலம்: 'கமலப் பாதங்கள்'. மேலானவர்களுக்கு மரியாதை அளிக்கும் பொழுது, பாதத்தில் ஆரம்பிக்க வேண்டும், மேலும் ஆசீர்வாதங்கள் தலையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அது தான் செயல்முறை. சீடர்கள் தன் மரியாதையை ஆன்மீக குருவின் கமலப் பாதங்களை தொடுவதின் மூலமும், மேலும் ஆன்மீக குரு சீடரின் தலையை தொடுவதின் மூலமும் ஆசீர்வதிப்பார்."
|