"வெளியாட்கள் சொல்வார்கள், "கிருஷ்ண உணர்வு என்றால் என்ன? அவர்கள் அழகான வீட்டில் வசிக்கிறார்கள் மேலும் நன்றாக உண்ணுகிறார்கள், நடனம் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். இதில் என்ன வேறுபாடு? நாமும் அதை செய்கிறோம். நாம் சங்கத்திற்கு செல்கிறோம், மேலும் நன்றாக உண்ணுகிறோம், மேலும் நடனமும் ஆடுகிறோம். இதில் என்ன வேறுபாடு? இதில் வேறுபாடு இருக்கிறது. அது என்ன வேறுபாடு? ஒறே பாலில் செய்யப்படுபவை கோளாறு ஏற்படுத்துகிறது, மற்றொரு பாலில் செய்தது குணப்படுத்துகிறது. இது நடைமுறை. மற்றொரு பாலில் செய்தது குணப்படுத்துகிறது. நீங்கள் சங்கத்தில் நடனமும் ஆடுவதும் மேலும் சங்கத்தில் உண்பதுமாக இருந்தால் படிப்படியாக பௌதிக ரீதியில் நோயாளியாகிவிடுவீர்கள். மேலும் இங்கு அதே நடனமாடுவதாலும் மேலும் உண்பதாலும் நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். எதையும் நிறுத்த வேண்டியதில்லை. வெறுமனே ஒரு நிபுணர் மருத்துவரின் அறிவுரைப்படி மாற்றப்பட வேண்டும். அவ்வளவுதான். நிபுணர் மருத்துவர் சில மருந்துகள் கலந்த தயிரை உங்களுக்கு கொடுப்பார். உண்மையில் மருந்து நோயாளியை சும்மா ஏமாற்றுவதற்கு தான். உண்மையில் தயிர் செயல்புரியும். எனவே அதேபோல் நாம் அனைத்தையும் செய்ய வேண்டும், ஆனால் அது கிருஷ்ண உணர்வு என்னும் மருந்துடன் கலக்கப்பட்டதால் அது உங்கள் பௌதிக நோயை குணப்படுத்தும். அதுதான் செயல்முறை."
|