TA/690109b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அனைத்தும் கிருஷ்ணருக்கே சொந்தம் என்று புரிந்துக் கொள்வது, இதுதான் கிருஷ்ண உணர்வு. ஒருவர் இம்மாதிரி புரிந்துக் கொண்டால் அதாவது அனைத்தும்... ஈஷாவாஸ்யம் இதம்ʼ ஸர்வம் (இஸோ 1). ஈஷோபநிஷத் கூறுகிறது, 'அனைத்தும் பகவானுக்கே சொந்தமானது', ஆனால் பகவான் அதை உபயோகிக்க எனக்கு வாய்ப்பு அளித்திறுக்கிறார். ஆகையினால் என் அறிவையும் புத்திசாலித்தனத்தையும், பகவானுக்கு சேவை செய்ய பயன்படுத்தினால் அது அங்கே இருக்கும். அதுதான் என் புத்திசாலித்தன. என் புலன்நுகர்வுக்கு பயன்படுத்திய உடனே, நான் சிக்கிக் கொள்கிறேன். சிக்கிக் கொள்கிறேன். அதே உதாரணம் கொடுக்கப்படலாம் : வங்கி காசாளர் இவ்வாறு நினைத்தால் 'ஓ, இத்தனை மில்லியன் டாலர்கள் நான் அகற்ற வேண்டியுள்ளது. நான் கொஞ்சம் எடுத்து என் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறேன்', பிறகு அவன் சிக்கிக் கொள்கிறான். இல்லையெனில், நீ அனுபவிப்பாய். உனக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். உனக்கு நல்ல வசதிகள் கிடைக்கும், கிருஷ்ணருக்கு நல்ல விதமாக வேலை செய்யலாம். அதுதான் கிருஷ்ண உணர்வு. அனைத்தும் கிருஷ்ணருடையதாக கருத வேணடும். ஒன்றரை காசு கூட எனதல்ல. அதுதான் கிருஷ்ண பக்தி."
690109 - சொற்பொழிவு BG 04.19-25 - லாஸ் ஏஞ்சல்ஸ்