" 'நான் ப்ரஹ்ம-ஜ்யோதியில் ஒன்றிணைந்துவிடுவேன்', என்று நினைக்கும் முட்டாள்கள் குறைந்த புத்திசாலிகள், ஏனென்றால் அங்கு நிலைத்திருக்க முடியாது. அவர்களுக்கு விருப்பமும், ஆசையும் இருக்கிறது. கிருஷ்ணரிடம் போகாமல் அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்ற கூடிய வசதிகள் இல்லை. ஆகையினால் அவன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மறுபடியும் பௌதிக உலகத்திற்கு வருகிறான். ஏனென்றால் அவனுக்கு நடவடிக்கையும், மகிழ்ச்சியும் தேவைப்படுகிறது. ஆனந்த-மயோ (அ)ப்யாஸாத் (வேதாந்த-ஸூத்ர 1.1.12). ஆன்மீக ஆன்மாவும் பரம புருஷரும் இயற்கையில் மகிழ்ச்சியானவர்கள். மகிழ்ச்சியைப் பற்றி பேசப்படும் போது அது நிச்சயமாக பலவகையானதாக இருக்கும். ஆனால் அங்கு பலவகை இல்லை. ஆகவே பலவகை மகிழ்ச்சி இல்லாமல் அவனால் அங்கு நீண்ட காலம் இருக்க முடியாது. அவன் மறுபடியும் வரவேண்டும். ஆனால் அவனுக்கு ஆன்மீக மகிழ்ச்சி வகைகளைப் பற்றி தகவல் இல்லாததால், அவன் திரும்பவும் இந்த பௌதிக வகைகளுக்கு வரவேண்டி கட்டுப்படுத்தப்பட்டுவிட்டான். அவ்வளவு தான்."
|