"உண்மையில் நம் ஒவ்வொருவரும் நமது ஆன்மீக முக்தியை புறக்கணிக்கின்றோம். நாம் பௌதிக புலனுகர்ச்சியில் ஈடுபட்டுள்ளோம் மேலும், அதனால் மனித உடலின் மூலம் ஆன்மீக தளத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ள கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நாம் தவற விடுகின்றோம். இந்த மனித உடல் முக்கியமாக கட்டுண்ட ஆத்மாவுக்கு முக்திக்கான ஒரு வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்மீக முக்தியை பற்றி கவலைப்படாத எவரும் தனது ஆன்மீக மரணத்தை அழைத்துக் கொள்கின்றார். ஆன்மீக மரணம் என்பது தான் ஒரு ஆத்மா என்பதை மறப்பதாகும். அதுவே ஆன்மீக மரணம்."
|